உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதியூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: 10 கிராமங்கள் பாதிப்பு 10 கிராமங்கள் பாதிப்பு

ஆதியூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: 10 கிராமங்கள் பாதிப்பு 10 கிராமங்கள் பாதிப்பு

திருவாடானை: திருவாடானை அருகே ஆதியூர் ஊராட்சியில் ஓராண்டிற்கும் மேலாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.திருவாடானை அருகே ஆதியூர் ஊராட்சியில் ஆதியூர், காரங்காடு, கருப்பூர், வடக்கூர், படப்பை உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களுக்கு கடந்த ஓராண்டாககுடிநீர் நிறுத்தப்பட்டுஉள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் குளம், குட்டைகளில் நீர் தேங்கியதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால் நீர் நிலைகள் வற்றத் துவங்கியுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமமாக உள்ளது. குடிநீர் வழங்கக்கோரி திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருமுறை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். ஊராட்சித் தலைவர் கண்ணாத்தாள் கூறுகையில், ஓராண்டிற்கும் மேலாக குடிநீர் வராத நிலையிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில்மாதந்தோறும் ரூ. 22 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை குடிநீர் கட்டணம் செலுத்தப்படுகிறது. குடிநீர் சப்ளையே இல்லாமல் குடிநீர் கட்டணம் செலுத்தும் அவல நிலை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலரை தொடர்பு கொண்டு பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை