உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டேங்கர்களை சுத்தம் செய்யாமல் குடிநீர்: ஏர்வாடியில் பாதிப்பு

டேங்கர்களை சுத்தம் செய்யாமல் குடிநீர்: ஏர்வாடியில் பாதிப்பு

கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருவாரியான பகுதிகளில் டேங்கரில் விநியோகிக்கப்படும் தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவுகிறது.ஏர்வாடி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் அன்றாடம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. உச்சிப்புளி உள்ளிட்ட பகுதியில் இருந்து தண்ணீர் சேகரித்து ஏர்வாடி பகுதிகளில் வீடுகள், லாட்ஜ்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரை குடம் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர்.இந்நிலையில் டேங்கர்களை முறையாக பராமரிக்காமல் பாசி படர்ந்த நிலையில் ஏற்கனவே உள்ள நீரை சுழற்சி முறையில் பயன்படுத்துவதால் அதனை அப்படியே பருகுவோர் சிரமத்தை சந்திக்கின்றனர். ஏர்வாடியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் டேங்கர் லாரிகளை மட்டுமே பொதுமக்கள் பெருமளவில் நம்பி உள்ளனர். குடிநீர் டேங்கர்களில் முறையாக சுத்தம் செய்யாமலும் ப்ளீச்சிங் பவுடர் செய்து அவற்றை பராமரிக்காமல் விட்டுள்ளதால் பாசி படர்ந்து இரும்பு துகள்கள் தங்கியும் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் உரிய முறையில் டேங்கர்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை