மேலும் செய்திகள்
அரபிக்கடலில் சூறாவளி கரை திரும்பிய மீனவர்கள்
24-Aug-2024
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, தேவிபட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கிழக்கு கடல் பகுதியில் கடல்நீர் இயல்பு நிலையை விட மாறுதல் அடைந்து அமைதியான சூழல் நிலவுகிறது. வழக்கத்தை விட கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திடீரென இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் நேற்று கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதித்தனர்.மீன்வளத் துறையின் திடீர் அறிவிப்பால் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் பாதிப்படைந்தனர்.
24-Aug-2024