உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ரோட்டோர கடைகளின் ஆக்கிரமிப்புகள் பொது இட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் ரோட்டோரங்களில் விஸ்தாரமான இடவசதி ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக இருப்பதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கும் தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளன.இதனால், வர்த்தக நிறுவனங்கள், ரோட்டோரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் முகப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ரோடு குறுகி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி, தனுஷ் குமார் தலைமையில் தாசில்தார் வரதராஜன், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரம்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் டி.டி.மெயின் ரோடு, பரமக்குடி ரோடு, பஜார் ரோடு, புல்லமடை ரோட்டில் விஸ்தாரமான இடவசதி கிடைத்துள்ளது.இதனால், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை எளிதாக நிறுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தடுப்பது அவசியம்

ஆண்டுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றியதாக உயர் அதிகாரிகளுக்கு படத்துடன் கூடிய அறிக்கை சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் ஒரு சில நாட்களிலே, மீண்டும் ரோட்டோர வர்த்தக நிறுவனங்களால் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. எனவே, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை