| ADDED : ஆக 11, 2024 04:48 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7மாவட்டங்கள் பயன்பெறும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த விவசாயிகள்வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தலைவர் சோழந்துார் பாலகிருஷ்ணன் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காவிரி ஆற்றில் இருந்து தெற்கு வெள்ளாறு, வைகை, கிருதுமால்நதி, குண்டாறு வரை 262 கி.மீ.,க்கு கால்வாய் அமைத்து உபரி நீரை கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகியமாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர்பாசன வசதி பெறும். காவிரிஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீராக வெளியேறி கடலில் கலக்கும் நீரை வறட்சியான பகுதிகளுக்கு கால்வாய் வெட்டி திருப்பிவிடுவதன் மூலம் வறட்சியான பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் மட்டும் உயரும். விவசாயம் செழிக்கும்.எனவே இப்பணியை துரிதப்படுத்தி அடுத்து சிவகங்கை வைகை வரை கொண்டு வந்து ராமநாதபுரம் விவசாயிகள்பயன்பாட்டிற்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.