உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இலவச மின் இணைப்புக்கு  ஸ்மார்ட் மீட்டர் பொருத்த  விவசாயிகள் அமைப்பு கண்டனம் 

 இலவச மின் இணைப்புக்கு  ஸ்மார்ட் மீட்டர் பொருத்த  விவசாயிகள் அமைப்பு கண்டனம் 

ராமநாதபுரம்: விவசாயிகளின் இலவச மின் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாக்கியநாதன் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கேட்டு விவசாயிகள் சங்கத்தலைவரான நாராயணசாமி நாயுடு பல்வேறு போராட்டங்கள் நடத்தி 63 உயிர்களை பலி கொடுத்து 1989 ல் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 23 லட்சம் விவசாயிகள் இலவச மின் திட்டத்தில் பயனடைகின்றனர். 4 லட்சம் விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சிம்கார்டுகள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பாக மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றதால் குதிரைத்திறன் அதிகம் கொண்ட மோட்டார் இயந்திரங்களை பயன்படுத்தினால் மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க முடியும்.அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்களுக்கு கட்டணம் விதிக்கும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்திற்கென தனி வழித்தட திட்டத்தை செயல்படுத்துகிறது.அப்படி செயல்படுத்தும் பட்சத்தில் மின் வாரியமே மின் இணைப்புகளை துண்டிக்கும் நிலை ஏற்படும்.இலவச மின் இணைப்புக்கு பொது வழித்தடத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பில் இருந்து நழுவி வருவதற்காக மத்திய அரசின் உதய் மின் திட்டம் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறது. இது கண்டனத்திற்கு உரியது, என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி