உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன் நாளை விவசாயிகள் போராட்டம் 

மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன் நாளை விவசாயிகள் போராட்டம் 

ராமநாதபுரம் : குவாரி அமைக்க அனுமதி வழங்கி விதி மீறல்களுக்கு துணை போகும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு நாளை (செப்., 19ல்) காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணை செயலாளர் சி.நேதாஜி தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆறுகளை பாதுகாக்காமல் மணல் குவாரிகளை நடத்த அனுமதி வழங்குவது. மனித குலத்திற்கு உதவும் நிலத்தடி பாறைகளை, மலைகளை, எம் சாண்ட், ஜல்லி, கிரஷர், கிரானைட், சுண்ணாம்பு என குவாரிகளாக மாற்றி கொள்ளையடிக்கப்படுகிறது. மாவட்டம் தோறும் தொழிற்பேட்டைகளை அமைத்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை கெடுத்து, மண், காற்றை விஷமாக்கி சுற்றுசூழல் சீரழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக லஞ்சம், ஊழலில் ஊறி திளைத்து சுற்றுச்சூழல் சம்பந்தமான அனைத்து அனுமதிகளையும் எந்த கேள்வியும் கேட்காமல் வழங்கி வருகிறது. குவாரிகள் நிபந்தனைகளை மீறி இயக்கி சுற்றுச்சூழலை கெடுக்கும் போது நடவடிக்கை எடுக்காமல் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு சுற்றுச்சூழலுக்கு விரோதமான போக்கினை கையாள்கிறது. எனவே சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கூண்டோடு பணி நீக்கம் செய்து, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தி நாளை (செப்., 19ல்) சென்னை பனகல் மாளிகை முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ