உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர்வரத்துப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள்  வலியுறுத்தல்

நீர்வரத்துப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள்  வலியுறுத்தல்

ராமநாதபுரம் : -நீர் வரத்துப் பாதையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் பாரதி நகரில் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். செயலாளர் மணிமாதவன், பொருளாளர் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால் முன்னிலை வகித்தனர்.தேங்காயை விவசாயிகளிடமிருந்து கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவும், நிதி நிர்வாக மூலதனமாக தலைவர் உட்பட உறுப்பினர்களிடம் பணம் வசூலிப்பது, தேங்காயை காய வைத்தல், உரித்தல், கொப்பரை ஆக்குதல் பணிக்கு உரிய அனுமதியுடன் எட்டிவயல் களம் மற்றும்இயந்திரங்களை பயன்படுத்தவும், நீர் வரத்துப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க துணைத்தலைவர் கதிரேசன், துணை செயலாளர் தங்கச்சாமி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை