மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
02-Mar-2025
ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 24 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பிப்., 28 முதல் மார்ச் 2 வரை ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்தினர்.நான்காம் நாளான நேற்று தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உள்ளிட்ட ஏராளமானோர், மீனவ பெண்கள், கையில் மண்சட்டிகள், தட்டுகளை ஏந்தியபடி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
02-Mar-2025