2வது நாளாக மீனவர்கள் ஸ்டிரைக்
ராமேஸ்வரம்,:நேற்று இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பல லட்சம் ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பிப். 24 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கினர். 2ம் நாளாக நேற்று மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் 700 படகுகளையும் கரையில் நிறுத்தி வீடுகளில் முடங்கினர். மீன்வரத்தின்றி மதுரை, கோவை, சேலம், கேரளா மார்க்கெட்டுக்கு மீன்களை அனுப்ப முடியாமல் வியாபாரிகள் திணறினர். இதனால் பல லட்சம் ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்களுக்கு வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.