மேலும் செய்திகள்
விளக்கு பூஜை
19-Aug-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் விநாயகர் மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விநாயகர் வழிபாட்டுடன் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் துவங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று மாலை 6:30 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் வி.ஏ.ஓ., உப்பூர் கிருஷ்ணன், ஜமீன்தார் நாராயணன் செட்டியார், தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், உப்பூர் குமரையா அம்பலம், கடலுார் முருகன் அம்பலம், கடலுார் ஊராட்சி தலைவர் முருகவள்ளி, மோர்ப்பண்ணை முன்னாள் கிராம தலைவர் துரை.பாலன், உப்பூர் முத்துமாரி அம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Aug-2024