உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சிறுவர் பூங்காவில் குப்பை

பரமக்குடி சிறுவர் பூங்காவில் குப்பை

பரமக்குடி: பரமக்குடி சிறுவர் பூங்காவை சுற்றி கழிவுகள் கொட்டப்படும் நிலையில் துர்நாற்றத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.பரமக்குடி நகராட்சியில் ஒரே பொழுதுபோக்கும் இடமாக சிறுவர் பூங்கா உள்ளது. இப் பூங்காவை சுற்றி உழவர் சந்தை, மீன் மார்க்கெட், கோழி, இறைச்சி கடைகள், நகராட்சி குப்பை கொட்டும் இடம் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.சிறுவர் பூங்கா ஒருபுறம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. காம்பவுண்ட் சுவர் சில இடங்களில் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். நகராட்சி குப்பையை கொட்டி பிரிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.சிறுவர் பூங்காவிற்கு வரும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துர்நாற்றத்துடன் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர். பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம் வசூலிப்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை அகற்றி பூங்காவை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி