உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை இன்ஜினியரிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கீழக்கரை இன்ஜினியரிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 37வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.முகம்மது யூசுப் சாகிப் தலைமை வகித்தார்.அறக்கட்டளை செயல் இயக்குனர் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை இயக்குனர்கள் ஹபீப் முகமது, ஹுசேன் ஜலால், முகம்மது சதக், அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர் எஸ்.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அண்ணா பல்கலை தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மரைன் துறையைச் சார்ந்த மாணவர் வீர மணிகண்டனுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கினர். பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 7 மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.விழாவில் 185 இளநிலை இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் 69 முதுநிலை இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் செந்தில்குமார், பாலிடெக்னிக் முதல்வர் சேக் தாவூது, திட்டமிடல் அலுவலர் திராவிட செல்வி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஸ்வரன், ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் செல்வப் பெருமாள் உட்பட ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி