உயர்மின் கோபுர விளக்கு சரிபார்ப்பு
கமுதி: தினமலர் செய்தி எதிரொலியாக கமுதி அருகே அபிராமம் பஸ் ஸ்டாண்டில் உயர்மின் கோபுரம் விளக்கு சரிசெய்யப்பட்டது.அபிராமம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 40க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இங்கு கமுதி- - பார்த்திபனுார் ரோடு வீரசோழன் செல்லும் விலக்குரோட்டில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு கடந்த சிலநாட்களாக உயர்மின் கோபுர விளக்கு எரியாமல் இருளில் மூழ்கியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஆக.,22ல் செய்தி வெளியானது. இதன்காரணமாக அபிராமம் பேரூராட்சி, மின்வாரிய பணியாளர்கள் உயர்மின் கோபுர விளக்கை சரிசெய்துள்ளனர்.