உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: ஹிந்து முன்னணி மாநில செயலாளரை சிறையில் அடைத்த தமிழக அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.திண்டுக்கல்லில் பத்மகிரீஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தி வழிபாடு செய்ய சென்ற ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 5 நிர்வாகிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதியில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராமேஸ்வரம் நகர் ஹிந்து முன்னணி தலைவர் நம்புராஜன், நிர்வாகிகள் மேகநாதன், நாராயணன், வீரசவுந்தர்ராஜன், கார்த்திக், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ