வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Model arasu
தண்ணி வருதா? ஜல் ஜீவனுக்கு சொல்லி அனுப்பவும்.
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பள்ளியில் கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பள்ளி தலைமை ஆசிரியர், தன் சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்துள்ளார்.திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில், 62 மாணவர்கள் படிக்கின்றனர். 100 ஆண்டுகளை கடந்த இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி, குடிநீர் வசதியில்லை.இது குறித்து, தலைமை ஆசிரியர் கதிரவன், பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கழிப்பறை வசதியில்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால், தலைமை ஆசிரியர் கதிரவன், தன் சொந்த பணம், 65,000 ரூபாய் செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார். கதிரவன் கூறியதாவது:கழிப்பறை கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் பயனில்லை. மாணவியர் கழிப்பறை செல்வதை தவிர்க்க தண்ணீர் குடிக்காமல் இருந்தனர். இதனால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் நலன் காக்க, சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Model arasu
தண்ணி வருதா? ஜல் ஜீவனுக்கு சொல்லி அனுப்பவும்.