உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு

பாம்பாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு

திருவாடானை : திருவாடானை அருகே பாம்பாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பால் மெகா பள்ளம் ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.திருவாடானை அருகே ஓரியூர் பாம்பாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இப்பகுதியில் மணல் குவாரி திறக்கப்பட்டது. அதன் பிறகு பெய்த பருவமழையால் மணல் அள்ளப்பட்ட இடங்களில் மீண்டும் மணல் நிரம்பியுள்ளது. இப்பகுதியில் மணல் திருட்டு அதிகமாக நடக்கிறது. ஓரியூர் கிராம மக்கள் கூறியதாவது:இரவு நேரங்களில் ஆற்றில் மணல் திருட்டு அதிகமாக நடக்கிறது. காலையில் சென்று பார்த்தால் ஆங்காங்கே பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளபட்டுள்ளது தெரிய வருகிறது. மணல் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் அதை சாதகமாக பயன்படுத்தும் மணல் திருடர்கள் அதிக விலைக்கு விற்று சம்பாதிக்கின்றனர். இந்நிலை நீடித்தால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். ஆகவே மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.வருவாய்த்துறையினர் கூறுகையில், மணல் திருட்டை தீவிரமாக கண்காணிக்கிறோம். ஆற்றின் ஒரு பகுதி புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ளது. ஆகவே அந்த இடங்களில் தான் மணல் திருட்டு நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை