உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு துவக்கம்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு துவக்கம்

திருவாடானை: திருவாடானை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் துவங்கியுள்ளது.ஜன.1ல் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்களும் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர். இதனால் திருவாடானை தொகுதியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அனைத்து வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியை துவக்கியுள்ளனர். இது குறித்து திருவாடானை தாலுகா தேர்தல் துணை தாசில்தார் இந்திரஜித் கூறியதாவது:இப்பணியில் சத்துணவு பணியாளர்களும், கிராம உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யும் பணி நடைபெறும். கள ஆய்வின் போது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மொத்த உறுப்பினர்கள், அவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர் என கண்டறிய உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை