உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் உண்டா?

பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் உண்டா?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளதால் அக்டோபரில் ரயில் போக்குவரத்து துவக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பாலத்திற்கு ராமேஸ்வரத்தில் பிறந்து அணு விஞ்ஞானியாகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் பெருமை சேர்த்த அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை மத்திய அரசு பரிசீலித்து பாலத்திற்கு அப்துல்கலாம் பெயரை சூட்டும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று பாலத்தின் மேற்கு நுழைவில், 'பாம்பன் பாலம்' என எழுதிய பெயர் பலகையை ரயில்வே ஊழியர்கள் அமைத்தனர். பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.ஆனால், 'பாலம் திறக்கப்பட உள்ளதால் இது வழக்கமாக வைக்கப்படும் பெயர் பலகை தான். பாலம் திறக்கப்படும் போது பெயர் மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது' என, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ