உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வல்லபை விநாயகர் பூஜையில் பங்கேற்ற ஜமாத்தார்

வல்லபை விநாயகர் பூஜையில் பங்கேற்ற ஜமாத்தார்

ராமநாதபுரம் ; -ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் சதுர்த்தியையொட்டி இந்தாண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட வல்லபை விநாயகருக்கு நடந்த சிறப்பு பூஜையில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அலிநகர் முஸ்லிம் ஜமாத்தார் பங்கேற்றனர்.பிரப்பன்வலசை நொச்சியூருணி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 15 ஆண்டுகளாக வல்லபை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், அன்னதானம், ஊர்வலம் நடக்கிறது.இந்தாண்டு சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.அதற்கு பிரப்பன்வலசையில் உள்ள அலி நகர் ஜமாத்தார் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விநாயகருக்கு நடந்த சிறப்பு பூஜையிலும் ஜமாத்தார் பங்கேற்றனர். விநாயகர் ஊர்வலம் சிறப்பாக நடக்க அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விநாயகர் சதுர்த்தி விழா இங்கு நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை