உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருமலையான் கோயில் களரி விழா: மஞ்சள் பூசி ஆசிர்வாதம்

கருமலையான் கோயில் களரி விழா: மஞ்சள் பூசி ஆசிர்வாதம்

பரமக்குடி: - பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் கருமலையான் கோயில் மாசி களரி விழாவில், சாமியாடிகள் பக்தர்களுக்கு மஞ்சள் பூசி ஆசிர்வாதம் செய்தனர்.மாசி களரி விழாவையொட்டி கருமலையான், ராக்கச்சி அம்மன், முனியப்ப சுவாமி, பாப்பாத்தி அம்மன், சோனை கருப்பணசுவாமி உள்ளிட்டவர்களுக்கு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடந்தது. கடந்த வாரம் கருமலையான் திருமேனி பெட்டி வைப்பதற்காக புதிய பூஜை வீடு கட்டப்பட்டது. அங்கு நேற்று முன்தினம் இரவு முழுவதும் பூஜைகள் நடந்து, ஆடு பலியிடப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது.விழாவில் குழந்தைகளுக்கு கரும்பாலை தொட்டி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர். சாமியாடிகள் ஊர் வலம் வந்த போது மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். சாமியாடிகள் பக்தர்களுக்கு மஞ்சள் பூசி ஆசிர்வதித்தனர். விழா கமிட்டியினர் உட்பட ஊர் மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி