உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

முதுகுளத்துார்: முகுகுளத்துார் அருகே காக்கூரில் கோயில் அருகே கீழே கிடந்த பர்ைஸ உரியவரிடம் ஒப்படைத்த ஜெயச்சந்திரனை போலீசார் பாராட்டினர்.முதுகுளத்துார் அருகே காக்கூர் சேர்ந்த திருப்பதி மகள் நித்யா கோயில் விழா முடிந்து திருச்சி செல்வதற்காக தனது தாத்தா முருகேசன் உடன் டூவீலரில் பரமக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது நித்யாவின் பர்ஸ் தொலைந்துவிட்டது. எங்குதேடியும் கிடைக்கவில்லை. முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் காக்கூர் சேர்ந்த ஜெயச்சந்திரன் கூத்தபெருமாள் கோயில் அருகே கீழேகிடந்த பர்ஸ் கண்டெடுத்தார். அவர் டி.எஸ்.பி., சின்னக்கண்ணுவிடம் ஒப்படைத்தார். பர்ஸில் ரூ.5350, ஆதார் அட்டை, ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இருந்ததன.போலீசார் தொலைந்தவரிடம் தகவல் தெரிவித்தனர். நித்யாவின் தாத்தா முருகேசனிடம் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு பர்ைஸ ஒப்படைத்தனர். பணத்திற்கு ஆசைப்படாமல் பர்ஸ் எடுத்துக் கொடுத்த ஜெயச்சந்திரன், அவரது உறவினரை போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை