மேலும் செய்திகள்
மாவட்ட கோயில்களில் கும்பாபிஷேகம்
11-Feb-2025
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வேல் ஸ்தாபிதம் செய்தார். இந்த வேல் இருந்த இடத்தில் செந்தில் முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. மூலவராக வேல் மட்டுமே உள்ளது.இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மார்ச் 8ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு செந்தில் முருகன் கோயில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை முத்துக்குமார் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அருகே உள்ள அலங்கார மண்டபத்தில் விஸ்வகர்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் சித்தார்கோட்டை அருகே கோகுலவாடி வலம்புரி விநாயகர், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்களால் எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு,சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
11-Feb-2025