உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை குப்பை தேக்கத்தால் அவதி

கீழக்கரையில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை குப்பை தேக்கத்தால் அவதி

கீழக்கரை: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டுகளில் முறையாக குப்பை அள்ளப்படாததால் தேங்கி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். கீழக்கரையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.நகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப துாய்மைப் பணியாளர்கள் இல்லாததால் பல இடங்களில் குப்பை கொட்டப்பட்டும் முறையாக அள்ளப்படாத நிலை தொடர்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கீழக்கரை நகராட்சியில் முன்பு 64 துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றினர். தற்போதைய நிலையில் குறைந்த அளவே துாய்மைப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். முன்பு இரவு நேரங்களிலும் குப்பை சுத்தம் செய்த காலம் மலையேறி போய்விட்டது.தற்போது கீழக்கரை நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைத் தொட்டிகளில் குப்பை போடாமல் அதனைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடும் நிலவுகிறது. கூடுதல் துாய்மைப் பணியாளர்களை நியமித்து முறையாக மக்கும் குப்பை மக்கா குப்பை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தற்போது பொறுப்பேற்றுள்ள நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை