உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எல்.ஐ.சி., ஊழியர் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., ஊழியர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: மத்திய அரசு எல்.ஐ.சி., யின் பங்குகளை மேலும் 6.5 சதவீதம்  விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து  ராமநாதபுரம் எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  கிளைச்  செயலாளர் வெயிலுமுத்து தலைமை வாகித்தார். கிளை தலைவர் முத்துப்பாண்டி  முன்னிலை வகித்தார். பெரிய நிதி நிறுவனமான எல்.ஐ.சி., பங்குகளை விற்கக் கூடாது என கோஷமிட்டனர். ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். கிளை பொறுப்பாளர் சுல்தான் பாட்சா நன்றி கூறினார்.–––––––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை