உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை மெக்கானிக்குக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை மெக்கானிக்குக்கு 5 ஆண்டு சிறை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் குஞ்சார்வலசையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் ராஜேஷ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மண்டபம் அருகே குஞ்சார்வலசையை சேர்ந்த வடிவேல் மகன் ராஜேஷ் 42. இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். 2020 பிப்.2 ல் தான்வசிக்கும் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். மண்டபம் போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து ராஜேைஷ கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ராஜேஷ்க்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ