உள்ளூர் செய்திகள்

பால் குட ஊர்வலம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் நாயக்கன்மார் கிழக்கு தெருவில் நொண்டி முனியாண்டி கோயில் மாசிக்களரி விழா நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். முதுகுளத்துார் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.நொண்டி முனியாண்டிக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை