உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

முதுகுளத்துார்: அரப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் முகாம் நிறைவு விழா நடந்தது. முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வெங்கட் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.மருதகம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமில் தொடக்கப்பள்ளி வளாகம், கோயில், ரோட்டோரங்கள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !