உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருச்செந்துார் செல்லும் பஸ்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை

திருச்செந்துார் செல்லும் பஸ்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை

சாயல்குடி: ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக துாத்துக்குடி, திருச்செந்துார் செல்லும் கும்பகோணம் கோட்ட அரசு பஸ்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயணிகளிடம் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இம்முயற்சிக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகள் கூறியதாவது:ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் அலைபேசியில் இருந்து டிக்கெட் கொடுக்கக்கூடிய மிஷினில் பொருத்தப்பட்டிருக்கும் க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் போது உடனடியாக அதற்குரிய தொகை சம்பந்தப்பட்ட டிப்போவில் உள்ள அரசு வங்கி கணக்கில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கண்டக்டரும் பயணிகள் செல்லக்கூடிய ஊருக்கான டிக்கெட்டை தருகிறார். இது போன்ற வசதி செய்திருப்பது பயனுள்ளதாக உள்ளது. பெரும்பாலும் பயணிகளுக்கும் கண்டக்டருக்கும் இடையே சில்லரை கொடுப்பதில் பிரச்னை இன்றி சுமூகமாக பயணம் செய்வதற்கு இது வழி வகுக்கிறது என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி