உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம சபை தீர்மானத்திற்கு நிதி ஒதுக்க ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

கிராம சபை தீர்மானத்திற்கு நிதி ஒதுக்க ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

திருவாடானை, : கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிதி ஒதுக்க ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. அக்.2, ஆக.15ல் ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது. இக்கூட்டங்களில் நிறைவேற்றபட்ட திட்டங்கள், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பேசப்பட்டது.கிராம சபை கூட்டம் நடைபெறும் போது பலர் பல்வேறு கேள்விகளை எழுப்புவார்கள். அவர்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். சாக்கடை சுத்தம் செய்வது, குடிநீர் பிரச்னை, ரோடு வசதி, தெரு விளக்கு, கொசு மருந்து அடித்தல், மயான சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகின்றன.போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் வளர்ச்சி திட்டப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு நடைபெறாமல் போகிறது.தீர்மானங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சி தலைவர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி தலைவர்களின் பதவிக் காலம் முடியும் தருவாயில் உள்ளது.இதுகுறித்து சில ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டம் வளர்ச்சி பணிகளுக்கு போதிய நிதி இல்லாததால் கிடப்பில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கினால் மட்டுமே நிறைவேற்றபட்ட தீர்மானங்களுக்கான பணிகளை விரைந்து முடிக்க முடியும். அதற்கான நிதியை ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை