மேலும் செய்திகள்
சாலையில் படர்ந்து வளரும் சீமைக்கருவேல மரங்கள்
01-Sep-2024
பரமக்குடி, : பரமக்குடியில் இருந்து தெ.புதுக்கோட்டை ரோட்டோரங்களில் சீமைக்கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலையில் உள்ளது. பரமக்குடி ஆற்றுப்பாலம் வழியாக வைகை நகர், புதுநகர், இளையான்குடி ரோடு பிரியும் இடத்தில் தெ.புதுக்கோட்டை ரோடு செல்கிறது. இதன் வழியாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும்.மேலும் இந்த ரோட்டில் தனியார் பள்ளிகள் இயங்கும் சூழலில் விளை நிலங்கள் இப்பகுதியில் உள்ளது. இதனால் தொடர்ந்து மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், விவசாயிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவர்.இந்நிலையில் ரோட்டோரங்களில் வெள்ளை கோடுகள் அமைத்து கடந்த ஆண்டுகளில் வாகன ஓட்டிகள் வசதியாக செல்லும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.சில மாதங்களாக ரோட்டோரம் உள்ள செடி, கொடிகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்நோக்கி வளர்ந்து வருகிறது. முள் செடிகள் அடர்ந்து வருவதால் ரோட்டோரம் நடப்பவர்களின் பாதங்கள் மற்றும் டூவீலர் உள்ளிட்டவை பஞ்சராகும் நிலை உள்ளது. ஆகவே வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் அச்சத்தை போக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Sep-2024