உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அனுமார் கோயில் கஜேந்திர மோட்ச லீலை கருட வாகனத்தில் ராமர்

பரமக்குடி அனுமார் கோயில் கஜேந்திர மோட்ச லீலை கருட வாகனத்தில் ராமர்

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் மாசி மகத்தில்கஜேந்திர ஆழ்வார் மோட்ச லீலை நடந்ததது.ராமானுஜர் பஜனை மடத்தில் இருந்து காலையில் சுவாமி அழைப்பு ஊர்வலம் சென்றனர். அனுமார் கோயிலில் இருந்து ராமருக்கு கருட வாகனத்தில்தீபாராதனை நடத்தப்பட்டு புறப்படாகினார்.பின்னர் முக்கிய விதிகள் வழியாக வந்து நாயுடு மகாஜன சபை மடத்தில் அமர்ந்தார். அங்கு பூஜைகள் நிறைவடைந்து மீண்டும் ராமர் கோயிலை அடைந்தார். மாலை சங்கு பூஜைகள், சுதர்சன ஹோமம், சக்கரத்தாழ்வார், அஞ்சநேயருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு, நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.இரவு சக்கரத்தாழ்வார் பக்தி உலா வந்து கஜேந்திரமோட்ச லீலை நடந்தது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் நாயுடு மகாஜன சபை தலைவர் பரமக்குடி நகராட்சி துணை சேர்மன் குணசேகரன், அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி