உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்டுபிள்ளையார் கோயில் தெருவில் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

காட்டுபிள்ளையார் கோயில் தெருவில் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் பெயரளவில் பாதாள சாக்கடை பாரமரிப்பு நடப்பதால் காட்டுபிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றத்தால் மக்கள் தவிக்கின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகரில் குடியிருப்புகள் அதிகரிப்பு மற்றும் குழாய்கள் சேதமடைந்து அடைப்புகள் காரணமாக கழிவு நீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. நகரில் 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கழுகூருணியில் சாலைக்குடியிருப்பு பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாநகர் பம்பிங் நிலையத்தில் மோட்டார் சரிவர இயங்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக காட்டுபிள்ளையார் கோவில் தெருவில் ரோட்டில் குளம் போல கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றத்தால் மக்கள் தவிக்கின்றனர். அவ்வப்போது கழிவுநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இருப்பினும் இப்பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை