உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மிரட்டும் நாய்கள் அச்சத்தில் மக்கள்

பரமக்குடியில் மிரட்டும் நாய்கள் அச்சத்தில் மக்கள்

பரமக்குடி: பரமக்குடி தெருக்களில் கூட்டம் கூட்டமாக திரியும் நாய்களால், நடந்துசெல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.தெருக்களில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்தபடி உள்ளது. தொடர்ந்து நகராட்சியில் பல ஆண்டுகளாக நாய்களுக்கு கு.க., செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் நாய்கள் இனப்பெருக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. புதியவர்கள் செல்லும் பொழுது குறைப்பதுடன் நாய் கடிக்கு ஆளாகின்றனர். நாய்கள் குப்பை மேடுகளில் திரிவதால் சொறி பிடித்து உடல் முழுவதும் புண்ணாகி பல அலைகிறது.எச்சங்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் அடுத்த பகுதியில் இருந்து நாய்கள் நுழையும் பொழுது நீயா நானா என்ற போட்டியில் சண்டையிட்டுக் கொள்கிறது. மக்கள் ரோட்டில் நடந்துசெல்ல அச்சப்படுகின்றனர். ஆகவே சொறி பிடித்த நாய்களை அப்புறப்படுத்துவதுடன், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ