உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீவுகளில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்: வனத்துறை சேகரிப்பு

தீவுகளில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்: வனத்துறை சேகரிப்பு

சாயல்குடி : துாத்துக்குடி வன உயிரின சரகம் சார்பில் சாயல்குடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடற்கரையோரப் பகுதிகள், தீவுகளில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது.துாத்துக்குடி மன்னார் வளைகுடா வன உயிரின சரக அலுவலக பணியாளர்களுடன் இணைந்து எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில் தீவுகளில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சாயல்குடி அருகே மூக்கையூர் கடலின் அருகாமையில் உள்ள நல்ல தண்ணி தீவு, உப்பு தண்ணி தீவு, புளுகுனி சல்லி தீவுகள் மற்றும் துாத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட வான் தீவு, காரி சல்லி, விலங்கு சல்லி, காசு வாரி தீவுகளில் குவிந்திருந்த ஐந்து டன் பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுப் படகு மற்றும் விசைப்படைகளில் மீனவர்கள் விட்டுச் சென்ற நைலான் கயறு, பேய் வலைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் பெருவாரியாக தீவுகளை சுற்றி சேகரிக்கப்பட்டன.துாத்துக்குடி வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது: ஆழ்கடலில் போடக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் வன உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. எனவே கடலுக்குள் எவ்வித மக்காத தன்மை கொண்ட பொருட்களை போடக்கூடாது. தொடர்ந்து தன்னார்வலர்கள் குழுக்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை எச்.சி.எல்., பவுண்டேஷனிடம் ஒப்படைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை