உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் பகுர்தீன் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா, நுாற்றாண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி கலெக்டர் முகமது இர்பான் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தொழிலதிபர் முகமது இப்ராகிம், முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வஹாப் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் முத்துமாரி, நிர்வாக சபை தலைவர் அம்சத் அலி உட்பட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை