முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர் விரல் ரேகை பதிய வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுதாரர்களும் (PHH கார்டுகள்), அவர்களின் 5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகை பதிவை ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும். ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி முதுகுளத்துாார் ஆகிய தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் அனைத்து முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் கார்டுதாரர்கள், 5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகை பதிவை ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ரேஷன் கார்டில்பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் பணி நிமித்தம் வெளி மாவட்டத்தில் தங்கி பணி புரிந்தாலோ, பள்ளிகல்லுாரிகளில் பயின்று வந்தாலோ தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு ரேஷன் கார்டு எண்ணுடன் நேரில் சென்று தங்களது விரல் ரேகை பதிவை பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துஉள்ளார்.