உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வக்பு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்

வக்பு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்

கீழக்கரை : கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்தும், வக்பு வாரிய சொத்தை அபகரிக்க நினைக்கும் போக்கை கண்டித்தும் கீழக்கரையில் அனைத்து ஜமாத் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.பொதுக் கூட்ட குழு தலைவர் முகமது பரூஸ் தலைமை வகித்தார். கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு தலைவர் ஷேக் பஷீர் அகமது முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் முகமது அஜீகர் வரவேற்றார். முகமது ஜுபைர், எஸ்.டி.பி.ஐ., கட்சி நகர் தலைவர் முகமது சலீம்.கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளர் சப்ரஸ் நவாஸ், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, வக்பு பாதுகாப்பு கண்காணிப்பு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், வழக்கறிஞர் அலாவுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை