உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ராகவேந்திரர் ஜெயந்தி விழா

பரமக்குடியில் ராகவேந்திரர் ஜெயந்தி விழா

பரமக்குடி : பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராகவேந்திர சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது.இவர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிந்து மத மகான் ராகவேந்திரரின் இயற்பெயர் வேங்கடநாதன். இவர் வைணவ நெறியையும், மத்வர் நிறுவிய துவைத மதத்தையும் போதித்தவர். பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஆந்திரா மாநிலம் மந்த்ராலயத்தில் பிருந்தாவனம் அமைக்கப்பட்ட ஜீவ சமாதியில் இருக்கிறார்.பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் மகா மண்டபத்தில் இவரது திருவுருவச்சிலை உள்ளது. நேற்று காலை 11:30 மணிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை பஜனைகள், ஆராதனைகள் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா உட்பட ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !