மேலும் செய்திகள்
வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் உட்பட இருவர் கைது
08-Oct-2024
ராமேஸ்வரம்: கடலுாரைச் சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி சாந்தலட்சுமி ஆகியோருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். இதில், 9 பேருக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசிக்கின்றனர். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் கடைசியாக அண்ணன் வேலு, 54, தங்கை பானுமதி, 48, இருவருக்கும் திருமணம் ஆகாமல் வசிக்கின்றனர். மேலும், இவர்கள் குடும்ப செலவுக்கு வழியின்றி இருந்த நிலையில், பூர்வீக சொத்தை விற்று தொழில் செய்ய விரும்பினர். இதற்கு சகோதர - சகோதரிகள் ஒத்துழைக்கவில்லை. இதனால் வேதனையடைந்த அண்ணன், தங்கை விரக்தியில் ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர். சாவிலும் அண்ணன், தங்கை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலுாரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்து தனுஷ்கோடி மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Oct-2024