உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக் மீன்கள் விலை உயரும் நிலை

ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக் மீன்கள் விலை உயரும் நிலை

ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியதால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் உள்ளது.இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்து, படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர்.இதனால் இங்கு 700 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு பத்தாயிரம் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். மேலும் கடலோரத்தில் உள்ள டீக்கடைகள், லேத், பட்டறைகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.ஸ்டிரைக்கால் ராமேஸ்வரத்தில் மீன் வரத்தின்றி மதுரை, கோவை, கேரளா மார்க்கெட்டுக்கு மீன்கள் செல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ