உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் கடை பணியாளர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில், பொது விநியோகத்திற்கு தனித்துறை உருவாக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் தினகரன் தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார்.பொது விநியோகத்துறைக்கு தனித்துறை, அனைத்து பொருட்களையும் பொட்டலமாக வழங்குதல், ஓய்வூதியம், 9வது ஊதிய குழுவில் சேர்த்தல் என்பதுட்பட 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை