உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை

மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை

கமுதி: -கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜநாடார் தெருவில் கழிவுநீர் கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு ராஜநாடார் தெருவில் கால்வாய் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் கால்வாயில் அவ்வப்போது கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்குகிறது.வீடுகளில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை