உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்  நலக் கமிஷனர் ஆய்வு கூட்டம் 

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்  நலக் கமிஷனர் ஆய்வு கூட்டம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் ஆய்வு கூட்டம் நடந்தது.பிற்பட்டோர் நலத்துறை கமிஷனர் சம்பத் தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உட்பட 7 மாவட்டத்தினை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது, திட்டங்கள் பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைவது குறித்து கமிஷனர் சம்பத் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் 12 பயனாளிகளுக்கு 5000 ரூபாய் மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளை கமிஷனர் சம்பத் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ