உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.36 கோடியில் ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை: டி.ஆர்.ஓ., ஆய்வு

ரூ.36 கோடியில் ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை: டி.ஆர்.ஓ., ஆய்வு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் ரூ.36 கோடியில் ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை அமைக்க டி.ஆர்.ஓ., மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஓராண்டில் 2 கோடி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதன்படி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகில் இருந்து அரியாங்குண்டு, மெய்யம்புளி, பர்வதம், ஓலைக்குடா சங்குமால் கடற்கரை வரை ரூ.36 கோடியில் 6.25 கி.மீ., சுற்றுச் சாலை அமைக்க உள்ளனர்.இதற்காக சாலை அமையும் வழித்தடத்தில் தனியார் வசமுள்ள இடத்தில் 100 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) ஜானகி, நெடுஞ்சாலைத்துறை ராமநாதபுரம் கோட்ட அலுவலர் பிரேம் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் நேற்று ராமேஸ்வரத்தில் நிலம் கையகப்படுத்தும் பகுதியை ஆய்வு செய்தனர். சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நவ.,ல் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ