மேலும் செய்திகள்
பாம்பாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு
30-Aug-2024
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து கிடந்ததால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதனை ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் அகற்றியது.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து தனுஷ்கோடியில் மணல் புயல் வீசியதால், தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை 10 கி.மீ.,ல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மணல் குவிந்து கிடந்தது. இதனால் சுற்றுலா வாகனங்கள் சாலையில் செல்லும் போது திணறியதால் விபரீதம் ஏற்படுமோ என சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இந்த மணல் குவியலை அகற்றிட சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மணல் குவியலை அகற்றினர்.
30-Aug-2024