உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி கிரிக்கெட் அணி வெற்றி

செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி கிரிக்கெட் அணி வெற்றி

ராமநாதபுரம் : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம்இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கல்லுாரிகளுக்கிடையிலானகிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. ராமநாதபுரம் செய்து அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு கிரிக்கெட் சங்கத்தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி முதல்வர் பெரியசாமி பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த போட்டித் தொடரில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி அணி முதல் பரிசையும், செய்யது ஹமீதியா கலைக்கல்லுாரி அணி 2ம் பரிசும், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு கலைக்கல்லுாரி அணியினர் 3ம் பரிசையும், முகமது சதக் பொறியியல் கல்லுாரி அணியினர் நான்காம் பரிசையும் பெற்றனர்.ஆட்ட தொடர் நாயகன்விருது நவீன்குமாருக்கும்,இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது முகிலனுக்கும் வழங்கப்பட்டது. தர்மேந்திர பிரகாஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன் மற்றும் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை