உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறை

எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு புதிய கட்டடத்தில் மாற்றப்படாமல் இன்னும் பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள் புதிய கட்டடத்திலிருந்தும், மகப்பேறு பிரிவில் இருந்தும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு அலையும் நிலை உள்ளது. 7 எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளன. டிஜிட்டல் இயந்திரங்கள் குறைவாகவே உள்ளன. அனலாக் மேனுவல் முறையில் எடுக்கப்படும் இயந்திரங்களாக உள்ளன. 10 ஆண்டுகள் கடந்தும் பழைய இயந்திரங்களில் எக்ஸ்ரே எடுத்து வழங்கப்படுகிறது. இது துல்லியமாக இல்லாததால் டாக்டர்கள் சிரமப்படுகின்றனர். எக்ஸ்ரே பிரிவில் 16 பணியாளர்கள் இருக்க வேண்டும். இன்று வரை 4 பணியாளர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதில் 3 பேர் நிரந்தரப்பணியாளர்கள். ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார்.ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நுாறு முதல் 150 எக்ஸ்ரே எடுக்கின்றனர். இதனால் எக்ஸ்ரே எடுப்பதற்காக உடல் உபாதைகளுடன் நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.எனவே புதிய கட்டடத்தில் எக்ஸ்ரே பிரிவு செயல்படவும், டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள் அமைக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வரே வண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ