உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தையில் விற்பது குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. உணவு பதன் செய் பொறியியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  உணவு பாதுகாப்பு சட்டம், தர நிலைகள், நுகர்வோர் பாதுகாப்பு, மதிப்பு கூட்டல், சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும் நோய்களில் இருந்து பழங்கள், காய்கறிகளை தாக்கும் நுாற்புழுக்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.  திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் பிரதிநிதி கீர்த்திவாசன், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை