| ADDED : ஆக 01, 2024 04:25 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாள் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.தன்னை அறிதல், தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல், நேர்மையான வாழ்வியலை வழக்கமாக்கி கொள்ளுதல், நேர மேலாண்மை, இடர் தாண்டுதல், கூட்டு உழைப்பு, வலிமை அறிதல் போன்ற தலைப்புகளில் பயிற்றுனர் இளங்கோ முத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.பயிற்சியில் சிறப்பான பதில்களை அளித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பிரேமா, ஆசிரியர் யமுனா, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அறக்கட்டளை ஆசிரியர் திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.